புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

விளையாட்டு வினையானால் அது விளையாட்டல்ல


வாழ்வில் மேற்கொள்ளும் சில கடமைகளோ, உறவுகளோ ஒரு விளையாட்டின் அங்கம்தான் என்ற புரிதலுடன் ஈடுபடும் சிலரே, காலப்போக்கில் அது வெறும் விளையாட்டுதான் என்பதை மறந்து விடுகிறார்கள். எல்-லோரையும் எப்போதும் வெல்ல வேண்டும் என்கிற உந்துதல், விளையாட்டை வினையாக்கி விடுகிறது. அதன்பின்னர், எல்லாம் என் முட்டாள்தனத்தால் வந்தது என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறார்கள்.
Download As PDF

ஈஷா யோகா - உறுதியின் பாதை



நீங்கள் முதலில் உணர வேண்டியதே, நீங்கள் சில குறுகிய எல்லைகளுக்குள் இயங்குகிறீர்கள் என்பதைத்தான். உங்கள் நம்பிக்கைகள்தான் உங்களை அதிகம் ஏமாற்றுகின்றன. கடவுளை நம்புவதாக நினைக்கிறீர்கள். அச்சமின்றி வாழ்வதாக எண்ணுகிறீர்கள். ஆனால் அடுத்த வீட்டு நாய் துரத்தினால்கூட அலறிக் கொண்டு ஓடுகிறீர்கள்.

உங்களை பாதுகாப்பாக உணரச்செய்யும் உங்கள் நம்பிக்கைகளைப் போல் உங்களை ஏமாற்றக் கூடிய விஷயம் எதுவுமில்லை. எனவே, அச்சம், பதட்டம் ஆகிய குறுகிய எல்லைகளுக்குள் நீங்கள் வாழ்வதை முதலில் உணர வேண்டியது அவசியம். சொல்லப்போனால் உங்கள் அடிப்படை உணர்வே அச்சம்தான்.
Download As PDF

இதுதான் வாழ்க்கை!

ஒரு காட்டில் ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. வழியெங்கும் கற்களும், முற்களும் இருந்தாலும், சமாளித்து ஓடிக் கொண்டிருந்தான். தொடர்ந்து ஓடியவன் ஒரு மலைச் சரிவில் விழுந்தான். நல்லவேளையாக அந்தச் சரிவில் இருந்த ஒரு மரத்தின் வேர்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு தொங்கினான். தொங்கிக் கொண்டே கீழே குனிந்து பார்த்தால், சரிவின் கீழே ஒரு ஆறு ஓடியது. அந்த ஆற்றில்  ஒரு முதலை வாயைப் பிளந்து கொண்டு இவன் கீழே விழுவதற்காகக் காத்திருந்தது.

Download As PDF

நான் துறவி அல்ல; முழுமையான காதலன்!

நான்கு அரியர்களை வைத்து இருக்கும் என் மாணவன், யாரோ ஒரு பெண்ணுக்காக மூன்று மணிநேரம் தெருவில் காத்திருப்பதைக் கவனித்தேன். நன்றாகப் படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வத்தைவிட, ஒரு பெண் பின்னால் சுற்றும் ஆர்வம்தானே அவனுக்கு அதிகமாக இருக்கிறது? இன்றைக்கு இளைஞர்களைச் செலுத்தும் ஒரே சக்தி காதலாக இருப்பது ஆரோக்கியமான நிலையா? ஒரு துறவியிடம் கேட்கிறேனே என்று தப்பாக நினைக்காதீர்கள்!” என்று அண்மையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
‘நான் துறவி அல்ல; முழுமையான காதலன்!” என்று சிரித்தேன்.
Download As PDF

பிரபலமான கட்டுரை