கிருஷ்ணன் தனக்குத் தெரிந்தவை அனைத்தையும், தனது வாழ்க்கையில் தொடர்புடைய யாருக்கு வேண்டுமானாலும் வழங்குவதற்குச் சித்தமாக இருந்தான். அவனது இயல்பே அதுதான்! அதுவே அவனது வாழ்க்கை முறையாகவும் இருந்தது. எங்கே சென்றாலும், யார் தன்னை அணுகினாலும், பாகுபாடு என்பதே இல்லாமல் தன்னையே முழுமையாக அர்ப்பணிப்பதற்கு அவன் தயாராகத் தான் இருந்தான்ஆனால் உபதேசமாக அவன் உரைத்த கீதையின் பதினெட்டு அத்தியாயங்களையும் போருக்கு நடுவே பொறுமையுடன் கேட்க வேண்டுமானால் அது கிருஷ்ணனை மனமார நேசிக்கும் ஒருவனால் மட்டுமே இயலும். அர்ஜுனன் தன்னை நேசிப்பதைக் காட்டிலும் கிருஷ்ணனை அதிகமாக நேசித்தான். கிருஷ்ணனின் பதினெட்டு அத்தியாய உபதேசங்களையும் கேட்பதற்குத் தயாராக இருந்தான்.
தனது பதினெட்டு அத்தியாய உபதேசத்தை உட்கார்ந்து பொறுமையாகக் கேட்க கிருஷ்ணன், தன்னை நேசிக்கும் அர்ஜுனன் என்னும் ஓர் ஆசாமியை கண்டு பிடித்து விட்டான்.
கிருஷ்ணனின் கீதோபதேசத்தை அர்ஜுனன் அமர்ந்து கேட்பதற்குக் கூட அவன் வாழ்க்கையில் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்க வேண்டியிருந்தது. சகஜமானதொரு சூழலில் அர்ஜுனன் இருந்-திருந்தால் அவனும் கிருஷ்ணனின் உபதேசத்தைக் கேட்கத் தயாராக இருந்திருக்க மாட்டான்.
தவிர்க்க இயலாத மரணமும், அழிவும் கண்ணெதிரே நின்ற போதுதான் அவனால் கிருஷ்ணன் சொல்வதைக் கேட்க முடிந்தது.
எட்டாவது அவதாரமாகக் கிருஷ்ணன் அறியப்படுவதற்கும் அவன் தேவகியின் எட்டாவது குழந்தையாகப் பிறப்பு எடுத்தமைக்கும் ஏதாவது முக்கியமான காரணம் உள்ளதா?
No comments:
Post a Comment