
கிருஷ்ணன் தனக்குத் தெரிந்தவை அனைத்தையும், தனது வாழ்க்கையில் தொடர்புடைய யாருக்கு வேண்டுமானாலும் வழங்குவதற்குச் சித்தமாக இருந்தான். அவனது இயல்பே அதுதான்! அதுவே அவனது வாழ்க்கை முறையாகவும் இருந்தது. எங்கே சென்றாலும், யார் தன்னை அணுகினாலும், பாகுபாடு என்பதே இல்லாமல் தன்னையே முழுமையாக அர்ப்பணிப்பதற்கு அவன் தயாராகத் தான் இருந்தான்

