புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

விளையாட்டு வினையானால் அது விளையாட்டல்ல


வாழ்வில் மேற்கொள்ளும் சில கடமைகளோ, உறவுகளோ ஒரு விளையாட்டின் அங்கம்தான் என்ற புரிதலுடன் ஈடுபடும் சிலரே, காலப்போக்கில் அது வெறும் விளையாட்டுதான் என்பதை மறந்து விடுகிறார்கள். எல்-லோரையும் எப்போதும் வெல்ல வேண்டும் என்கிற உந்துதல், விளையாட்டை வினையாக்கி விடுகிறது. அதன்பின்னர், எல்லாம் என் முட்டாள்தனத்தால் வந்தது என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறார்கள்.

தன்னுடைய முட்டாள்தனம் என்று தெரிகிற போது, தான் முட்டாள் என்று தெரிகிற போது, என்ன செய்ய வேண்டும்? எதுவுமே செய்யக் கூடாது. ஏனெனில் முட்டாள் செய்கிற காரியங்கள் முட்டாள் தனத்தையே வளர்க்-கும். எனவே அந்த நேரத்தில் ஆன்மீக-மயமாக இருக்க முயற்சி செய்-யாதீர்கள். சாமர்த்தியமாக நடந்து கொள்ள முயலாதீர்கள். எது சாமர்த்-தியமான காரியம் என்று இதுவரை நினைத்தீர்களோ அது முட்டாள்தனம் என்று இப்போது தெரிந்து விட்டது. எனவே அமைதியாக இருங்கள்.
என் முன்பாக பெண் மனங்கள் வந்து அமர்கிற போதெல்லாம், தான் யார் என்கிற அகங்காரத்தை விட்டுவிட்டு சூழலுடன் பொருந்திப் போவது அவர்களுக்கெல்லாம் எளி-தான விஷயமாக இருக்கிறது. பெண் மனம் என்று சொல்கிற போது, நான் ஆண்-பெண் என்னும் பாலின பாகுபாடு குறித்துப் பேசவில்லை.

ஆண்மனம் கொண்ட பெண்களும் உண்டு. பெண்மனம் கொண்ட ஆண்களும் உண்டு.

எந்த மனதில் தர்க்க அறிவுக்கு முக்கியத்துவம் தரப்-படு-கிறதோ, அந்த மனம் என் முன்னே இயல்-பாக இருக்காது. ஏதோ ஓர் அச்சுறுத்தலை உணர்ந்து கொண்டே இருக்கும். அதனால்தான், ஆன்மீகத்தில் பெண்கள் மிகுதியாகப் பங்கேற்கிறார்கள்.
தர்க்க அறிவால் வழிநடத்தப் படுபவர்-களின் முட்டாள்தனம் எளிதில் வெளிப்பட்டு விடுகிறது. அவர்களுக்கு அந்த விழிப்புணர்வும் இல்லை. எனவே அதை விரும்புவதும் இல்லை. ஆனால் ஓரளவு விழிப்புணர்வுடன் இதைப் பார்ப்பவர்கள், தங்கள் அறியாமை வெளிப்படுவதை ஒரு விடுதலையாகவே உணர்வார்கள். விழிப்புணர்வு இல்லாதவர்கள், அதனை ஓர் அச்சுறுத்தலாக உணர்ந்து அந்த இடத்திலிருந்து விலகிச் செல்லவே விரும்புவார்கள். உங்கள் எல்லைகளை நீங்கள் கடந்து செல்ல வேண்டுமென்றால், உங்களின் ஏற்கும் தன்மை வளர்ந்தாக வேண்டும்.
ஏற்கும் தன்மை சார்ந்து குறியீடாக சொல்லப்-பட்ட விஷயம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. கடவுள் முதலில் ஆணைப் படைத்துவிட்டு பிறகே பெண்ணைப் படைத்தார் என்றால், அது பெண் மனம் தொடர்பான விஷயம். ஏற்கும் தன்மை குறித்த விஷயம். ஆணுடல் குறித்தோ பெண்ணுடல் குறித்தோ சொல்லப்-பட்டதல்ல. ஏற்கும் தன்மை குறித்து சொல்லப்-பட்டது. ஆணும் பெண்ணும் ஒருங்கே படைக்-கப்-பட்-டிருந்-தால்-தான் இந்த உலகம் நிகழ்ந்-திருக்க முடியும். ஆண் முதலாவ-தாகவும் பெண் இரண்டா-வதா-கவும் தோன்றி-யிருந்தால், உலகம் உருவாகியிருக்க வாய்ப்-பே-யில்லை.
புழுக்கள், பூச்சிகள் என எல்லாமே ஆணும் பெண்ணுமாகத்தான் தோன்றியிருக்கும். இதை நேரடியாக எடுத்துக் கொள்ளாமல், விழிப்புணர்வின் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். ஆண் என்றால் உடல் வலிமையின் குறியீடு. அச்சுறுத்தும் சூழல்களுக்கு நடுவே வாழ்வுக்கான போராட்டத்தை மேற்கொள்ளும் போது, மனிதன் உடல் வலிமையை சார்ந்து வாழ்ந்தாக வேண்டியுள்ளது. அப்போது மனிதனின் கை ஓங்குகிறது. அப்போது பெண்மை பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
ஆனால் ஏற்கும் தன்மை வளர வேண்டுமானால் அதற்கு பெண் மனம் அவசியம். நீங்கள் முட்டாள்தனம் செய்து விட்டதாக உங்களுக்குத் தோன்றினால், நான் சொல்வதைக் கேட்பீர்கள். நீங்கள் சொல்வதும், செய்வதும்தான் சரி என்று உங்களுக்குத் தோன்றினால் யார் சொல்வதையும் கேட்க மாட்டீர்கள். ‘என்னிடம் முட்டாள்தனம் இருக்கிறது. வாழ்வின் தொடக்கமோ முடிவோ எனக்குத் தெரியாது. என் இருப்பின் அடிப்படையே எனக்குத் தெரியாது’ என்று நீங்கள் நினைத்தால்தான் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பீர்கள்.  உங்கள் வாழ்வைப்பற்றிக் கூட அபிப்பிரா-யங்களைத்தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்களே தவிர, அனுபவமாக அதனை உணர்ந்ததில்லை.
ஆண் மனம், விளையாட்டுக்கள் மூலமாக வாழ்வை நடத்தப் பார்க்கிறது. பெண் மனதைப் பொறுத்தவரை, ஏற்றுக் கொள்ளலில் இருந்தே அதற்கு எல்லாம் துவங்குகிறது.
உங்கள் எல்லோர் வாழ்வுமே ஏற்றுக் கொள்வதன் மூலம்தான் நடக்கிறது. ஆனால் அதை நீங்கள் உணர்வதில்லை. உங்கள் நாசி, மூச்சுக்காற்றை ஏற்பதால்தான் உங்கள் வாழ்வே நடக்கிறது. ஆனால் ஏற்கும் தன்மையை விட்டொழித்ததன் மூலமாக நீங்கள் வாழ்வின் அடிப்படையையே இழந்தவராகிறீர்கள். இருத்தலுக்கான தேடல், முன்னேற்றத்திற்கான தேடல் போன்றவற்றால், இந்த உலக உருண்டையை மட்டுமின்றி, உங்களையும் நீங்கள் அழித்துக் கொள்கிறீர்கள். 
எனவே உங்கள் முட்டாள்தனம் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். அதில் சாமர்த்தியம் காட்டாதீர்கள். நீங்கள் செய்வது முட்டாள்தனம் என்று உங்களுக்குத் தோன்றி விட்டால், அதற்கே மிகப்பெரிய புத்திசாலித்தனம் வேண்டும். தன் அறியாமையை யார் அறிந்திருக்கிறாரோ, அவரே அறிவாளி. உங்களை நிலைநாட்டவோ, உங்கள் பாதுகாப்புக்-காகவோ எந்த விளையாட்டையும் விளையாடாதீர்கள். விளையாட்டு என்பதே நீங்கள் கரைந்து போவதற்கான ஒரு கருவிதான்.
ஆனால் விளையாட்டில் ஈடுபடுவதை மறந்துவிட்டு வெற்றியை எட்டுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள். இதற்குப் பெயர் விளையாட்டல்ல. விளையாட்டில் கரைந்து போங்கள். உங்கள் அகங்காரத்தைக் கரைந்து போகச் செய்வதே விளையாட்டு.
Download As PDF

No comments:

பிரபலமான கட்டுரை