புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

நிலா வந்தாச்சு

நமது வாழ்க்கை என்பது காலமும் சக்தியும் கலந்த ஒரு கலவையாக இருக்கிறது. இதில் காலம் அல்லது நேரம் என்பது யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தக் காலத்தை அளப்பதற்கு நாமே சில வழிமுறைகளை கண்டுபிடித்து பயன்படுத்துகிறோம். பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றி வந்தால் அது ஒரு நாள். சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி வந்தால், அது ஒரு மாதம். பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வந்தால், அது ஒரு வருடம். அடிப்படையில் நேரத்தைப் பற்றிய நம்முடைய கணிப்பு, சூரியனைச் சுற்றி பூமியின் இயக்கம் மற்றும் பூமியைச்சுற்றி சந்திரனின் இயக்கம் ஆகிய இரண்டு விஷயங்களைப் பொறுத்தே இருக்கிறது. மேலும் சூரியன் மற்றும் சந்திரனைப் பொறுத்து, அந்தந்தக் காலகட்டத்தில் பூமி இருக்கும் இடம், நம் உடல் மற்றும் மனதின்  செயல்பாடுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Download As PDF

சர்ப்ப சேவா

இந்த நவீன காலத்தில் இரண்டு பேர் சேர்ந்து சுமுகமாக இருக்க முடிவதில்லை. அது கணவன் மனைவி என்று மட்டுமில்லை. உடன் பிறந்தோர் இருவர் அல்லது அப்பாவும் மகனும் அல்லது நண்பர்கள் இருவர் அல்லது வியாபாரக் கூட்டாளிகள் இருவர்  தாங்கள் சேர்ந்திருக்க வேண்டும் என்று விரும்பினாலும் பல நேரங்களில் அப்படி சேர்ந்து இருக்க முடியாமல் தடுமாறுகின்றனர். ஆனால் இவற்றில் மிகவும் பாதிக்கப்படுவது என்னவோ கணவன் மனைவிதான்.
நமது ஆன்மீகக் கலாச்சாரத்தில் இதற்கெல்லாம் சூட்சுமமான தீர்வு வைத்திருந்தனர். பல சடங்குகளை உருவாக்கி வைத்திருந்தனர். அந்த ஆன்மீக வழிமுறையை ஒட்டி லிங்கபைரவி திருக்கோவிலிலும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் பல பயன்களுக்கு பல சடங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் சர்ப்ப சேவா. இரு நபர்கள்  கணவன் மனைவி, அப்பா மகன், இரு நண்பர்கள், இரு வியாபாரக் கூட்டாளிகள் என்று இருவர் சேர்ந்து இந்த சர்ப்ப சேவையில் பங்குபெறும்போது அவர்களுக்குள் நீடித்த நிலையான உறவு நிகழ்கிறது.
Download As PDF

பரிட்சையில் தோல்வியா?


இந்த வருடமும் பட்டமேற்படிப்பை முடிக்கவில்லை. இரண்டு பாடங்களில் மீண்டும் தேர்ச்சி பெறவில்லை. வாழ்க்கையே வெறுத்தநிலையில் இருக்கிறேன். மிகவும் விரக்தியான மனநிலையில் இருக்கிறேன். அதிலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை, நான் என்ன செய்வது?

சத்குரு:

விரக்தி என்பது மிகவும் மோசமான ஆரம்பம். முதலில் விரக்தி வரும். தொடர்ந்து மனத்தளர்வு வரும். அப்புறம் மனஅழுத்தமே வந்துவிடும்.

Download As PDF

பிரபலமான கட்டுரை